விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணாளர் - மணவாளப்பிள்ளை
வந்து  - அவ்விடத்தை விட்டுவந்து
என் நெஞ்சுள்ளும் - என்னுடைய நெஞ்சினள்ளும்
 கண்ணுள்ளும் - கண்களினுள்ளும்
நின்று நீங்கார் - நிலைநின்று நீங்கமாட்டா திருக்கின்றார்;

விளக்க உரை

மேகமண்டலத்தளவுஞ் செல்ல ஓங்கி, சந்திரன் வந்து தீண்டும்படியான உயர்த்தியை யுடைத்தான திருமாலிருஞ்சோலை மலையை இருப்பிடமாகக் கொண்ட பரமரஸிகர் தாமு எழுந்தருளி என்னுடைய அவயவங்களெல்லாவற்றையும் விரும்பி ஒரு நொடிப்பொழுதும் விட்டு நீங்குமவரா யிருக்கின்றிலர்; திருநீர்மலை யெம்பெருமான் போலவும் திகழ்கின்றார்; அறுதியிட்டுச் சொல்லமாட்டுகின்றிலேன்; மிகவுயர்ந்ததொரு பொன் மலைமேலே காளமேகம் படிந்து வருமாபோலே பெரிய திருவடியின் மீது வீற்றிருந்து எழுந்தருளுங் கோலத்தை வந்து காணுங்கோள்! ; இவ்வழகுக்குப் பாசுரமிட என்னாலாகுமோ? இவருடைய அழகு விலக்ஷணமென்னுமித்தனையோ – என்றாளாயிற்று பின்னடிகளில், கருடன் பொன்மலையாகவும் எம்பெருமான் மாமுகிலாகவும் வருணிக்கப்பட்டமையறிக. “காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல” என்ற திருவாய்மொழியை அடியொற்றினபடி.

English Translation

The bridegroom of tall Mairumsolai hill caressed by the Moon came and filled my heart and my eyes, never to leave. Or was he the Lord of Nirmalai?, I cannot remember, He came riding a bird with beautiful wings. Come, see! He is like a dark cloud on a tall golden mountain touching the sky. Aho, was he beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்