விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளைநீர் வெள்ளத்து*  அணைந்த அரவுஅணைமேல்*
    துள்ளுநீர் மெள்ளத்*  துயின்ற பெருமானே* 
    வள்ளலே! உன்தமர்க்கு என்றும்*  நமன்தமர்-
    கள்ளர்போல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துள்ளு நீர் - சிறுதிவலைகள்
மெள்ள - மெதுவாகவீச
துயின்ற - திருக்கண்வளர்ந்தருள்கின்ற
பெருமானே - ஸ்வாமியே!
வள்ளலே - உதாரனே!

விளக்க உரை

யமதூதுர்கள் பாகவதர்களை அணுகமாட்டார்களென்றது கீழ்ப்பாசுரத்தில் அவர்கள் கிட்டாதமாத்திரமேயோ? அவர்கள் கள்ளர்போலே மறைந்தொளிந்து கிடக்கும் படியாயன்றோ உன் பிரபாவமிருப்பது என்கிறார் இப்பாட்டில். “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி, வைத்த இலச்சினைமாற்றித் தூதுவரோடியொளித்தார்” என்றார் பெரியாழ்வாரும். நோவுபட்டுக் கூவுமடியார்களின் கூக்குரல் செவிப்படுவதற்கு அணித்தாகத் திருப்பாற்கடலிலே சிறுதிவலைகள் துடைகுத்தத் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்யும் பெருமானே! அத்தனை தூரமும் பொறாமல் திருக்கண்ணபுரத்திலே வந்து மிக அணியனாகவுள்ள பெருமானே! நான் யமதூதர்களுக்கு அஞ்சவேண்டிற்றுண்டோ? உனக்கு அடியனாகுமத்தனையே வேண்டுவது; யமபடர்கள் அவ்வளவிலே ஓடியொளிக்கப் பெறுவர்களன்றோ – என்றதாயிற்று.

English Translation

O Lord, reclining in the foaming Ocean of Milk on a serpent bed! O Benevolent One! O Lord residing in Kannapuram! Like skulking theives, Yama's agents always go into hiding before your devotees!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்