விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருநீரும் விண்ணும்*  மலையும் உலகுஏழும்* 
    ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய*  நின்னை அல்லால்*
    வருதேவர் மற்றுஉளர் என்று*  என்மனத்து இறையும்-
    கருதேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலையும் - மலைகளையும்
உலகு ஏழும் - ஏழுலகங்களையும்
ஒரு தார் ஆ - ஒருமாலையாக
நின்னுள் - தன்னுள்ளே
ஒடுக்கிய - (ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட

விளக்க உரை

“அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பு அகன்றதோ” என்றபடி கைலாஸ கிரியுமுட்பட எல்லாவற்றையும் பிரளயகாலத்தில் திருவயிற்றில் கொண்டிருந்த உன்னைத் தெய்வமாக நினைப்பேனோ, அன்றி, உன்திருவயிற்றில் ஒடுங்கியிருந்து பின்பு வெளிவந்த எச்சில்களைத் தெய்வமாக நினைப்பேனோ என்கிறார்ப்பாட்டால்.

English Translation

O Lord residing in kannapuram! The ocean, the sky, the mountains, the seven continents, -all within a trice you swallowed and placed within yourself. My heart does not the slightest dwell upon other gods who appear before me: I seek but you alone!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்