விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
    இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
    விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
    கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கல் - அந்த மந்தரமலையானது
திரிய - நாற்புறமும் திரிந்து வரும்படியாக
தட கடலுள் - பெரிய அக்கடலிலே
சுமந்து கிடந்த - (அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த
வித்தகனை - ஆச்சரியபூதனான பெருமானை

விளக்க உரை

ஆழத்துக்கு அவதியில்லாத விடத்திலே மந்தரமலையைக் கொண்டுபோய் நிறுத்து மளவிலே அப்போதுண்டான குழப்பத்தைச் சொல்லுகிறது ‘மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக’ என்று. மலங்கு – மீன்களில் ஒருவகைச்சாதி. அமுத மென்பது – போன வுயிரை மீட்குந் தன்மையதான புகர் பெற்றிருத்தல் பற்றி ‘இலங்கு சோதி யாரமுதம்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. விலங்கல் திரிய = “மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால், மின்னுமிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும், தன்னினுடனே சுழல மலை திரித்து” என்ற பெரிய திருமடல் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.

English Translation

The ocean turned, the sea creatures jumped, when the Lord planted the Mandara mount and churned for ambrosia; to hold the mount from sinkingk or rolling, he came as a wonder-furtile and bore it on his back. I know he is in kannapuram, situated by the lashing ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்