விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-
    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர் - (தாமரை) மலரில் அவதரித்த
மகள் - பெரிய பிராட்டியார்
காதல் செய் - விரும்பப்பெற்ற
கணபுரம் - திருக்கண்ணபுரமானது,-
ஏதலர் - பகைவரான சிசுபாலாதிகள்

விளக்க உரை

“விரைமலர் கோதிய மதுகரம் குலவிய” என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும ஆகலாம்; மலர்க்கு ஆகும் பக்ஷத்தில், வண்டுகள் வந்து மொய்கும்படியான செவ்விவாய்ந்த தாமரைமலரில் தோன்றிய பெரிய பிராட்டியார் விரும்பும்படி ஸ்ரீமத்தான திருக்கண்ணபுரம் என்றதாகும். கணபுரத்துக்கு விசேஷணமாகும் பக்ஷத்தில் எங்கும் வண்டுகள் மொய்க்கும்படியான மதுவெள்ளம் பொருந்திய திருக்கண்ணபுரம் என்றதாகும். விரைமலர் கோதிய மதுகரம் குலவியதும், மலர்மகள் காதல் செய்வதுமான கணபுரம் என்றவாறு. செய – செய்ய. வெணெய் – வெண்ணெய். தொகுத்தல்கள். போது செய்தல் – த்ருப்தியாக வுண்ணுதல். புனிதர் - பரிசுத்தர்; நவநீதக்களவு முதலிய சேஷ்டிதங்களை அநுஸந்தித்த மாத்திரத்தி்ல் நாமெல்லாரும் பாவங்கள் தொலையப்பெற்றுப் புண்ணியம் பெறுவோமாதலின் இவ்வகையாலே நம்மைப் பரிசுத்தராக்கவல்ல பெருமாள் என்றுங்கொள்க.

English Translation

The perfect, pure Lord who was abused and laughed at for stealing butter resides in kannapuram where the lady of the bee-humming lotus resides lovingly with him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்