விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*
    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வியம் உடை விடை இனம் - வலிமை பொருந்திய விருஷபங்களின் கூட்டமானது
உடைதர - அழிந்தவளவிலே
மட மகள் - மடமைக் குணமுடைய நப்பின்னைப் பிராட்டியானது
குயம் - திருமுலைகள்
மிடை - நெருங்கியணைப்பெற்ற

விளக்க உரை

முன்னடிகளில் திருக்கண்ணபுரத் தெம்பெருமானுடைய பெருமையும் பின்னடிகளில் திருக்கண்ணபுரத்தின் சிறப்பும் சொல்லப்படுகின்றன. அன்னப் பறவைகள் இளமகளிரது அழகிய நடையை அநுகரித்து நடைபயிலப் பெற்றதும் பலவகைத் தடாகங்கள் நெருங்கியிருக்கப் பெற்றதுமான திருக்கண்ணபுரம் – ஏழ்விடைகளைச் செற்று நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களைத் திருமார்பாரத் தழுவிய பெருமான் உறையுமிடம் என்பதாம். வியமுடை விடையினம் = ‘வியம்’ என்னுஞ் சொல்லுக்குப் பல பொருள்களுண்டு; வலிமை யென்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. வேறுபாடு என்னும் பொருளுங் கொள்ளலாம்; கறுக்கொண்ட கஞ்சனால் ஏவப்பட்ட வந்தவையாகையாலே எங்குங் கண்டறியாத வேறுபட்ட வடிவையுடைய விடையினம் என்றவாறு. இனி ‘வியம்’ என்று ஏவலுக்கும் பெயராதலால் (கம்ஸனுடைய) ப்ரேரணையையுடைய விடையினம் என்னவுமாம். உடைதர – உடைய; தா – துணைவினை. உடைதல் – அழிதல். என்னும் வடசொல் குய மெனத் திரிந்தது. மிடைதல் – நெருங்குதல். “குயமுடை தடவரை” என்றும் வியாக்யானத்திற் பாடம் கொள்ளப்பட்டது. அப்பாடத்தில் “குயமுடைத் தடவரை” எனத் தகரவொற்று மிக்கிருக்க வேண்டுவது இல்லாமை – ஓசையின்பம் பற்றி வேண்டுழிக் கொண்ட விகாரமெனக் கொள்க. மூன்றாமடியில், ‘அன்னம்’ அனமெனத் தொக்கி யிருக்கிறது.

English Translation

The Lord who destroyed seven bulls and embraced the mountain-like breasts of the cowhered-dame Nappinnai resides in kannapuram where swans in lakes learn the art of graceful gait from young dames.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்