விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*
    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கழல் - வீரக்கழலையுடையருமான
மன்னர் - அரசர்களினுடைய
பெரும் போரில் - பெரிய பாரத யுத்தத்தில்
மயங்க - அறிவுகலங்கும்படி
வெண் சங்கம் - வெளாதத பாஞ்சஜந்யத்தை

விளக்க உரை

“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார்களிற்றுக் கழன்மன்னர் கலங்கச் சங்கம்வாய்வைத்தான்” என்கிறபடியே என்னைப்போல் பெண்ணாய்ப்பிறந்த வொருத்தியான த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிப்பதற்காகப் பாரதப் போரில் வியாபரித்து *மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியத் திருப்பவளத்திலே ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை வைத்து ஊதித் தன்னுடைய பக்ஷபாதத்தைக் காட்டியருளின மஹாநுபாவன் இன்று என் விஷயத்திலே அருள் செய்கின்றிலனே! ; படாத பாடுகள் பட்டு த்ரௌபதியின் மநோரதத்தைத் தலைகட்டினாப்போலே எனக்காக ஏதேனும் படாதபாடுகள் படச்சொல்லுகிறேனோ? இங்கு வரவேணுமென்றித்தனையே யன்றோ நான் வேண்டுவது. அவன்படி அப்படியிருக்கட்டும்; (எம்பெருமானுக்கு அஞ்சிக்கொண்டு காற்று வீசுகின்றது) என்று உபநிஷத்திற் கூறியபடியே அப்பெருமானுக்கு அஞ்சி நடக்கின்ற காற்றும் அவன் கருத்தையே பின்சென்று என் ஆவியைக் கொள்ளை கொள்ளப் பார்க்கின்றது : எல்லார்க்கும் ஆவியைத் தளிர்ப்பிக்கின்ற மந்த மாருதமானது இப்போது என் ஆவியைமாய்க்கின்ற படியாலே இஃது எப்போது தணியப் போகின்ற தென்று எதிர்ப்பார்க்கவேண்டிற்றாயிற்று; ஒருகால் தணியப்பெறில் என்னுடைய ஆவி என்னுடையதுதானென்று நினைத்துக்கொள்ள இடமுண்டாகு மென்றாளாயிற்று.

English Translation

The prince who placed his white conch to his lips and sounded it in the war against great elephant-riding warriors, making their wounded heads reel, does not come, alas! If only the white froth of the ocean picking the hot vapours and blowing over my breasts stops doing so, I may live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்