விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தி காவலன் - இராப்பொழுதுக்கு இறைவனான சந்திரனுடைய
அமுது உறு - அமுதம் மிக்க
பசுங் கதிர் அவை - அப்போதுண்டான கிரணங்களானவை
சுட - தஹிக்க,
அதனோடும் - அதோடுகூட,
மந்த மாருதம் - மெல்லிய தென்றற்காற்றும்

விளக்க உரை

தனிக்கிடை கிடந்து வருந்துகின்ற என்னுடைய நெஞ்சானது கண்ணபிரானைப் பின்பற்றிச் சென்றொழிந்தது; நெஞ்சு கைவிட்ட இந்த ஸமயத்திலே அப்பெருமானுடைய அருளாவது கிடைக்குமோ வென்று பார்த்திருக்கு மெனக்கு அவ்வருள் கிடையாதது மன்றிக்கே உலகத்தில் மற்றுள்ளவர்கட்குத் தாபத்தைத் தணித்துக் குளிர்ச்சியைப் பண்ணவல்ல நிலாத் தென்றல் முதவியனவும் என் திறத்திலே விபரீதங்களா யிருக்கின்றனவே; அந்தோ! என்கிறாள்.

English Translation

My forlorn heart has gone with the Lord who took birth to loosen the shackles on his father's feet. While I wait for the time of his grace, the blessed Moon, sentinel of the night, sends his sweet cool rays to scorch me and the soft breeze gently blows over my risen breasts, forturing me incessantly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்