விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*
    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் பேதை - என் குழந்தையினுடைய
மணி நிறம் கொண்டு - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளைகொண்டு
தான் - ஸ்வாமியாகிய நீ
கோயின்மை செய்வது - அநியாயம் பண்ணுவது
தக்கதே - தகுதியோ?

விளக்க உரை

தொண்டு எல்லாம் – தொண்டர் எல்லாரும் என்றபடி. பக்தர்களாயிருப்பவர்கள் எல்லாரும் திருக்கண்ணபுரத் தெம்பெருமானை அடிபணிந்து உஜ்ஜீவித்துப் போகிறார்களென்பதை யுணர்ந்து தானம் அப்படி உஜ்ஜீவித்துப் போக ஆசைகொண்டு திருக்கண்ணபுரம் தொழுதாள் இவள்; இப்படி அநர்த்தப்படப்போகிறோமென்று அறிந்திருந்தாளாகில் திருக்கண்ணபுரமுள்ள திக்கையும் நோக்கியிருக்கமாட்டாள்; உஜ்ஜீவிக்க வென்று வந்து தொழுதவளை இப்படி மேனி நிறமழியச் செய்து அநீதியானவற்றைச் செய்வது ஸர்வேச்வரனென்று பெயர் சுமந்திருப்பார்க்குத் தகுமோ? என்கிறாள் திருத்தாய். (மணிநிறங்கொண்டு தான்) *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்கையன்றோ முறைமை; தான் நன்மணி வண்ணானயிருக்க, இவளுடைய மணிநிறத்தைக் கொள்ளைகொள்ளத் தகுதியுண்டோ? (கோயின்மை செய்வது தக்கதே) ராஜநீதியில்லாதார் செய்வதை நீர் செய்யப்கடவீரோ? இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை யன்றோ அரசர்கட்கு முறைமை; ராஜாக்களே வழிபறிக்கை நீதியோ? என்கிறாள்.

English Translation

Seeing of devotees offer worship at your feet and find elevation of spirit, she too went to offer worship at Kannapuram, is it proper for you to steal my bee-humming coiffured daughter's rouge anarchically?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்