விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
  கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 
  புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
  பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
  பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளத்தில் - நீர்த்தாழ்வுகளிலே;
மேயும் - இரையெடுத்துத் திரிகின்ற;
பறவை - (கொக்கு என்னும்) பஷியின்;
உரு - ரூபத்தை;
கொண்டு - ஏறிட்டு்க்கொண்டு;

விளக்க உரை

யமுனைக் கரையிலே கண்ணபிரானைப் பகாஸுரன் விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பது – பகாஸுரவதவ்ருத்தாந்தம். பொதுக்கோ – பொதுக்கென. (“பிதுக்கென்று புறப்பட்டான்” என்று திரிந்து வழங்கிவருதல் காண்க.)

English Translation

Baka the evil Asura took the form of a stroke fishing in water. As if he were a mere bird, this child ripped apart his beaks. He is the one who sucked Putana’s breasts. O Raven, comb his hair, come an

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்