விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*
    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆம்பல் மலரும் - ஆம்பல் மலர்களும்
அரவிந்தமும் - தாமரைகளும்
கழுநீரொடு - செங்கழுநீர்ப் பூக்களும்
விரவி - சேர்ந்து
மடவாரவர் - (அங்குள்ள) மாதர்களினுடைய

விளக்க உரை

சிறுபுலியூரும் வேண்டா; அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா; அதிலுள்ள பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயற்கையாகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவருளர், அவர் திருவடிகளே சரணமென்றிருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடு மென்கிறார். வொண்ணாதபடியிருக்கு மென்கிறார் முன்னடிகளில்; நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களினுடைய கண்களாகவும், அரக்காம்பல்களைப் பார்த்தால் அப்பெண்களது அதரமாகவும், தாமரைப்பூக்களைப் பார்த்தால் அவர்களது முகங்களாகவும் விளங்குகின்றமையால் உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசிதெரிவரிதாம்.

English Translation

The blue water lily, the red water lily and the lotus flower together liken the eyes, lips and face of the maidens in Sirupuliyur Salasayanam by fertile fields. Those who worship those who offer worship there, will have no despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்