விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*
    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை - என்னை
நிலை ஆள் ஆக - நிலைநின்ற அடியவனாக
உகந்தானை - உகந்து திருவுள்ளம் பற்றினவனும்
நிலம் மகள் தன் - பூமிப்பிராட்டியினுடைய
முலை - திருமுலைத்தடங்களை

விளக்க உரை

நிலையாளாக என்னை உகந்தானை ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கள் அப்பலன் கைபுகுமளவும் ஆட்பட்டிருந்து பலன் கைபுகுந்தவாறே அகன்று போவர்கள்; அடியேன் அப்படியன்றியே எம்பெருமானையே உபாயமும் உபேயமுமாகப் பற்றினவனாதலால் என்னுடைய அடிமைக்கு ஒருநாளும் குலைதல் இல்லை; ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யும் நித்யகிங்கரனாக என்னைத் திருவுள்ளம் பற்றினானென்கிறார். (முதுநான்மறை யித்யாதி) திருவழுந்தூர்த் திருவீதிகள்தோறும் வேதகோஷம் கடலோசைபோல் முழங்கமாம். இப்படிப்பட்ட திருப்பதியிலெழுந்தருளியிருக்கும் எமிபிரானைக் கண்டுகளித்தேனென்றாராயிற்று. கலையார்சொற்பொருளை ஸகலசாஸ்த்ரங்களிலுமுள்ள ஸகல சப்தங்களுக்கும் எம்பெருமானேயிறே பொருள். ஸகல கலைகளாலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிகப்படுபவன் என்றுமாம். மூன்றாமடியில் “அலையார் கடல்” என்றும் பாடமுண்டு.

English Translation

The Lord is pleased to make me his permanent servant. He is the wonder-Lord who embraced Dame Earth and resides in the temple where the sound of the Vedic chants rises like waves in the ocean. He is the substance of the Sastras, he resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்