விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பஞ்சி அன்ன மெல் அடி - பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய
நல் பாவைமார்கள் -நல்ல ஸ்திரீகளினுடைய
ஆடகத்தின் அம் சிலம்பின் - பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான
ஆர்ப்பு - ஆரவாரமானது
ஓவா - இடைவிடாதிருக்கிற

விளக்க உரை

இதுவும் ஆழ்வார் நாயகி ஸமாதியால் பேசும் பாசுரம். கனவிலே வந்து கலந்து பிரிந்து போனவர் மற்றுள்ள அன்பரோடும் 1. நனவிலே கலவிசெய்ய வந்து நிற்கிறவிடம் திருவழுந்தூர். வஞ்சிமருங்குலிடைநோவ = பெண்டிருடைய இடைக்கு வஞ்சிக்கொடியை உவமை சொல்வது கவிமரபு. இடை நோவ மணந்து நின்றானென்றதனால் பூர்ணஸம்ச்லேஷம் நடந்தமை தோன்றும். ‘மருங்குல்’ என்றாலும் ‘இடை’ என்றாலும் இடுப்புக்கே பெயர்; இரண்டு சொற்களையும் சேரப் பிரயோகித்தது தமிழ் வழக்கு. கைகூப்பி – எச்சத்திரிபு. அங்குள்ள மாதர்கள் பொன்மயமான நூபுரங்களைக் காலிலணிந்து கொண்டு நர்த்தனம் பண்ணா நிற்பர்கள்; அதனாலுண்டான ஆரவாரம் ஓயாதிருக்கு மென்கிறது பின்னடிகளில். பஞ்சி – பஞ்சு! போலி. பாவைமார் – பதுமைபோல அழகியவர்கள்; உவமையாகுபெயர். ‘ஹாடகம்’ என்னும் வடசொல் ஆடகமெனத் திரிந்தது. 1. நனவு – கனவுக்கு எதிர்த்தட்டு; ப்ரத்யக்ஷம்.

English Translation

Cotton-soft-tender-feet-damsel's dancing bells never cease ringing in Alundur, laid out with beautiful streets, It is the residence of the Lord who blended with me in my dream-state making my creeper-slender waist with in pain, and I stood with folded hands, fully satisfied.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்