விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படுகடலில் - ஆழ்ந்த திருப்பாற்கடலில்
பை விரியும் வரி அரவில் - விரிந்த படங்களையும் புள்ளிகளையுமுடைய திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த - பள்ளிகொண்ட
பண்பா என்றும் - குணசாலியே! என்றும்,
மை விரியும் மணி வரை போல் - கருநிறம்மிக்க நீலமணி மயமான மலைபோன்ற (திருமேனியையுடைய)

விளக்க உரை

தாம் எம்பெருமானை விட்டு பாகவதர்களையே பற்றுவதாக அநுஸந்திக்குமித்திரு மொழியில் ‘தண்சேறை யெம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு’ என்று சொல்லிக் கொள்ளுதல் தகுமோவென்று சிலர் சங்கிப்பர்கள்; எம்பெருமானுடைய அடியார்களென்னுங் காரணத்தினால் பாகவதர்கள் உத்தேச்யர்களாக ஆகிறாப்போலே ‘பாகவதர்கள் ப்றறுந் தெய்வம்’ என்னுங்காரணத்தினால் எம்பெருமானும் உத்தேச்யனாதல் கூடுமென்க. “திரிதந்தாகிலுந் தேவபிரானுடைக்கரிய கோலத் திருவுருக்காண்பன் நான், பெரியவண் குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே” என்ற கண்ணிநுண் சிறுத்தாம்பும் அறிக. “சிந்தித் தேற்கு என்” என்ற விடத்து, வடமொழியில் ஆர்ஷ ப்ரயோகங்களிற்போல உபபத்தி கூறவேண்டும் ‘சிந்தித்தேற்கு’ என்பது ‘சிந்தித்த எனக்கு’ என்று பொருள்பட நின்றாலும், இங்கு அங்ஙனம் பொருள்படாது ‘சிந்தித்த’ என்று விசேஷண மாத்ரமாக நிற்கும்; திருமாலையில் “மழைக்கன்று வரை முனேந்தும்” என்ற பாசுரத்தில் “உழைக்கின்றேற்கு என்னை” என்ற பிரயோகமும் பிறவும் காணத்தக்கன.

English Translation

O Lord reclining in the deep ocean on a called serpent bed! O Dark hued gem! O wonder-Lord! Amid bee-humming lakes with blue waterlilies, the Lord resides in Tiruccherai. Those who contemplate him and serve him, are my masters, for whom my heart overflows with love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்