விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
    இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி
    அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
    சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரங்களால் இயன்ற மன்னர் மாள  - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி
பாரதத்து - பாரதயுத்தத்திலே
ஐவர்க்கு ஆய் சென்று - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி
இரங்கி - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி
ஒரு தேர் ஊர்ந்து - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி
அவர்க்கு - அப்பாண்டவர்க்கு

விளக்க உரை

க்ருஷ்ணாவதார முகத்தாலும் ராமாவதார முகத்தாலும் மண்ணில் பாரங்களை நீக்கியருளின மஹாநுபாவனுக்கன்றி மற்றொருவன் விஷயத்திலே என்னெஞ்சு தாழாது என்கிறார். * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தவன் சிலைவளையத் திண் தேர்மேல் முன்னின்று அருள் செய்தமையை முன்னடிகளிற் கூறுகின்றார். ‘சரங்களாண்ட’ என்றது “வில்லாண்டான்றன்னை” என்றாற்போலே; சத்துருக்களைக் காட்டு, காட்டு’ என்று விம்மிக் கிளம்புகின்ற அம்புகளை அடக்கி யாள்பவ னென்க “சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணன்” என்ற சேர்க்கையினால் – தாமரைக் கண்களின் கடாக்ஷத்திற்கு இலக்காகி உய்நததுபோகப் பெறாதே அம்புகட்கு இலக்காகி மாண்டுபோயினரே பாவிகள்! என்ற பரிதாபந்தோன்றும். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயததிலே “ந நமேயம் – தாழமாட்டேன்” என்று மார்பு நெறித்து மாண்டொழிந்தனர் ஆஸுர ப்ரக்ருதிகள்; என் மனம் அங்ஙனன்றியே தாழ்ந்து நின்று உய்வுபெறும் என்றாராயிற்று.

English Translation

In the Bharata war between mighty kings, See, the Pandavas won by me Krishna who steered the chariot killing mighty warriors, -He resides amid bee-humming nectared groves. He's the Lord of sweet Arangam and my heart, He's the Lord of gods, Lotus-like eyes and lips. He's the Lord who rained arrows on Lanka king. He alone commands me and my worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்