விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்த நாள் வந்து - தானாகவே என்னை ஸ்வீகரிக்க எழுந்தருளின நாளிலே எழுந்தருளி
என் நெஞ்சு - எனது நெஞ்சை
இடம் கொண்டான் - இருப்பிடமாகக் கொண்டான்;
மற்று ஓர் நெஞ்சு அறியான் - வேறொருவருடைய நெஞ்சையும் தனக்கு இருப்பிடமாக நெஞ்சிலும் நினைக்கின்றிலன்;
அடியேனுடை - அடியேனுடைய

விளக்க உரை

- எம்பெருமானை யடியேன் மறப்பதற்கு ஒரு ஹேதுவுமில்லையே, எப்படி மறப்பே னென்கிறார். ‘வந்தநாள் வந்து என்னெஞ்சிடங் கொண்டான்’ = எம்பெருமான் தம்முடைய நெஞ்சினுள் வந்த சேர்வதற்கு உறுப்பாகத் தாம் ஒரு முயற்சிசெய்து கைம் முதலுடையரா யிருந்தால் இன்னநாளிலே வந்து சேர்ந்தானென்று தாம் சொல்லக்கூடும்;அங்ஙனன்றியே எம்பெருமான் தானாகவே தன் பேறாகவே வந்துசேரக் கண்டவராதலால் ‘வந்தநாள் வந்து’ என்கிறார். – “ப்ரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாமிட்டது ஒரு பச்சையுண்டாய் அதுக்கு உபகரித்தானாகிலிறே இந்நா ளென்னலாவது; அங்ஙனென்றில்லாமையாலே ப்ரதம ஸ்வீகாரத்தை ‘வந்தநாள்’ என்னு மித்தனையாய்த்துச் சொல்லலாவது” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. தானாகவே வந்து என்னை விஷயீகரித்து என்னெஞ்சைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டருளின பின் திருவடி திருவனந்தாழ்வான் முதலானார் பக்கலிலும் போவானா யிருக்கின்றிலன்; அன்றியும், ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டும்’ என்று நான் கொண்டிருக்கும் மநோரதத்தைத் தான் உடையனாய்க் கொண்டு, யமபடர் கையிலே யகப்பட்டு நலிவுபட வேண்டிய பாவங்கள் பலவற்றையும் நான் செய்திருக்கச் செய்தேயும் என்னை அந்த நமன்றமர் கையிலே காட்டிக்கொடாமல் தானே நித்ய கைங்கரியங் கொள்ள நின்றான். இப்பேறுதான் அவனுடைய நிர்ஹேதுகமான திருவருளடியாகக் கிடைத்ததாகையாலே இதற்கு ஒரு நாளும் குலைதல் இல்லை யென்னும்படி பெற்றேன் என்கிறார் முன்னடிகளில்.

English Translation

Since the day he came he took up residence In this heart of mine, not any other one's He became my pure consciousness abiding. Protecting me from the agents of Yame-death. He resides amid fragrance in nectar-groves, Kudandal dancer-of-pots in reclining. He's my father and Lord of my father. How indeed can I learn to forget him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்