விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எண்ணெய்க் குடத்தை உருட்டி*  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்* 
  கண்ணைப் புரட்டி விழித்துக்*  கழகண்டு செய்யும் பிரானே!*
  உண்ணக் கனிகள் தருவன்*  ஒலிகடல் ஓதநீர் போலே* 
  வண்ணம் அழகிய நம்பீ!*  மஞ்சனம் ஆட நீ வாராய்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.

English Translation

O Lord of dark ocean-hue! Overturning the oil pitchers, pinching and waking up sleeping children, turning your eyelids inside out, such are the mischiefs you play. My Master, I will give you fruit to

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்