விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை*  நில மா மகள் மலர் மா 
    மங்கை*  பிரமன் சிவன் இந்திரன்*  வானவர் நாயகர் ஆய*
    எங்கள் அடிகள் இமையோர்*  தலைவருடைய திருநாமம்*
    நங்கள் வினைகள் தவிர உரைமின்*  நமோ நாராயணமே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ் ஆடை – தனக்குச் சுற்றிக்கொள்ளும் வஸ்த்ரமாக வுடையளான
நிலம் மா மகள் – பூமிப்பிராட்டியார்க்கும்
மலர் மா மங்கை – பெரிய பிராட்டியார்க்கும்
பிரமன் – நான்முகனுக்கும்
சிவன் – ருத்ரனுக்கும்

விளக்க உரை

கிளர்ந்த திரையை யுடைத்தாயிருக்கிற கடலை ஆடையாக வுடையளான பூமிப்பிராட்டி, பெரியபிராட்டியார், பிரமன், சிவன், இந்திரன், மற்றுமுள்ள தேவர்கள் இவர்கட்கெல்லாம் நாதன் என்பதே நாராயண நாமத்தின் அர்த்தமென்பது இப்பாட்டால் வெளியிடப்பட்டவாறு. “துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும்நாமம்” என்று முதல் திருமொழி யிலருளிக்செய்ததை ஸ்மரிப்பியா நின்று கொண்டு ‘நங்கள் வினைகள் தவிரவுரைமின் நமோ நாராயணமே’ என்றார்.

English Translation

The ocean-girdled Earth Dame, the lotus-dame Lakshmi, Brahma, Siva, Indra and all the other gods seek the Lord for their sustenance, He is our Lord and the Lord of the celestials, chant his Mantra, -Na-ma Na-ra-ya-na-me, -and be rid of your karmic account.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்