விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடுங் கால் மாரி கல்லே பொழிய*  அல்லே எமக்கு என்று 
    படுங்கால்*  நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*
    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி*  நிரையைச் சிரமத்தால்* 
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்*  நமோ நாராயணமே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல்லே பொழிய – கற்களையே வர்ஷிக்கையில்
எமக்கு அல்லே என்று – ‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று
படு்ங்கால் – நெஞ்சிலேபட்டு
ஆயர் – இடையர்கள்
நீயே சரண் என்று அஞ்ச – (எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க

விளக்க உரை

“தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையுமிறே வேண்டுவது ரக்ஷிக்கைக்கு; ஸ்வாபாவிக ஸம்பந்தத்தில் கண்ணழிவில்லையே” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி இங்கு உணரத்தக்கது. அல் – இரவு. ‘சிரமம் – ’ என்னும் வடசொல்விகாரம்.

English Translation

When the halistorm hit the cowherd's haunt, even before the cowherds could say, "Krishna, protect us!", the Lord lifted a huge mountain as an Umbrella and protected the cows from the cold, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்