விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்ற வரையும் கிடந்த கடலும்*  திசையும் இரு நிலனும்* 
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி*  நின்ற அம்மானார்*
    குன்று குடையா எடுத்த*  அடிகளுடைய திருநாமம்* 
    நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்*  நமோ நாராயணமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றும் ஒழியா வண்ணம் – சிறிதும் பாழாகாதபடி
எண்ணி நின்ற – ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற
அம்மானார் – ஸ்வாமியும்
குன்று – கோவர்த்தனமலையை
குடை ஆ எடுத்த அடிகளுடைய – குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய

விளக்க உரை

பூமிக்கு ஆணியடித்தாற்போலே பேராதே நிற்கிற குலபர்வதங்கள், கரையை அதிக்ரமியாமல் கிடந்தவிடத்திலே கிடக்கிற கடல்கள், திசைகள், பரப்புடைத்தான பூமி ஆக இப்படிப்பட்ட பதார்த்தங்கள் ஒன்றும் ஒருகாலும் குறையவொண்ணாதென்று தன்ஸங்கல்பத்தாலே இவற்றை மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டிருக்கும் பெருமைவாய்ந்தவனம், கோவர்த்தனமென்னுங் கொற்றைக்குடை யேந்தினவனுமான ஸர்வேச்வரனுடைய திருநாமமாகிய திருவஷ்டாக்ஷரமு நமக்கு நன்று; தொண்டர்களே! அத்திருநாமத்தையே நான் அது ஸந்தியாநின்றேன். (நீங்களும் அதனையே சொல்லுங்கோ ளென்பது கீழ்ப்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்ளவுரியது

English Translation

He protects through age after age, the staid mountains, the spread oceans, the Quarters, the firm Earth, all without exception, He lifted the mountain as an umbrella against a hoilstorm. Devotees, take good note of what I say, - his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்