விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடம்தான் உடைய அரவம் வெருவ*  செருவில் முன நாள்*  முன் 
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு*  மிக்க தாள் ஆளன்*
    இடந்தான் வையம் கேழல் ஆகி*  உலகை ஈர் அடியால்* 
    நடந்தானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விடம் உடைய அரவம் தான் – விஷத்தையுடைத்தான காளியநாகமானது
வெருவ – அஞ்சும்படியாக
முன் – இடைப்பிள்ளைகளின் முன்னே
தட தாமரை பொய்கை நீர் புக்கு – பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து
செருவில் – (அந்த நாகத்தோடு போர் செய்ததில்

விளக்க உரை

மிக்க தாளாளன் = காளியன் தலைமேல் திருவடிகளையிட்ட நர்த்தன மாடியவனென்றவாறு. “பொய்கையிலே போய்ப்புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தையுடையவன்” என்றும் வியாக்யானமிருப்பதால் இப்பொருளுக்குச் சேர “தாடாளன்” என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.

English Translation

Our Lord is the Lord who entered the lotus pond and danced on the venai spitting Kaliya's hoods, the Lord he came as a boar and fork-lifted it Earth, the Lord who straddled the Earth with his flower-soft feet. His Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்