விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
    வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*
    பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
    விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண் களகம் மதிள் புடைசூழ் – திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட
திருநறையூர் – திருநறையூரில்
நின்றானை – எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக
வண் களகம் – அழகிய அன்னப்பறவைகள்
நிலவு எறிக்கும் – நிலாப்போல் விளங்கப்பெற்ற

விளக்க உரை

இப்பாட்டில் அடிதோறும் களகமென்னுஞ்சொல் திரிபாக அமைக்கப்பட்டுள்ளது. திண்களகமதிள் = இங்குக் களகமாவது சுண்ணாம்புச்சாந்து; ஞானசம்பந்தர் பாடிய தேவாரம் முதல் திருமுறை, சீர்காழிப்பதிகத்தில் – “களகப்புரிசை கவினார்சாருங் கலக்காழி” என்றிவிடத்து இப்பொருளில் பிரயோகங்காண்க. வண்களக நிலவெறிக்கும் = இங்குக் களகமாவது ஹம்ஸபக்ஷி; ‘கலஹம்ஸ என்னும் வடசொல்லின் மரூஉ; “வயன் களகத் தேரேறி வேதாவும் வேண்டுவழிச் செல்ல” (பழம் பாட்டு) என்றவிடத்து இப்பொருளிற் பிரயோகங்காண்க. இதற்கு வேறுவகையாகவும் உரைக்கலாம்; - களகம் - நெற்கதிர்; கம் – நீரை, களம் - இடமாகக்கொண்டது; (மருத நிலம்.) அதன் முதன்மைப் பயிர் நெல் ஆகையால், களகம் – நெற்பயிர் என்னும் பொருள் பெறலாம். இப்பொருளும் வியாக்கியானத்திற் கொள்ளப்பட்டதே. என்ற வடசொல் திரிபு என்னலாம்.

English Translation

The king of Mangai city surrounded by lakes with swan pairs offers this garland of pure Tamil Pann-based songs at the feet of the Lord who stands amid spotless fall mansions in Tirunaraiyur. Those who master it will attain high heaven and live with celestials forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்