விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறை ஆரும் பெரு வேள்விக்*  கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்* 
    நிறை ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்* 
    பிறை ஆரும் சடையானும்*  பிரமனும் முன் தொழுது ஏத்த* 
    இறை ஆகி நின்றான் தன்*  இணைஅடியே அடை நெஞ்சே!         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை ஆரும் – வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட
பெரு வேள்வி – பெரிய யஜ்ஞங்களிலுண்டான
கொழும்புகை – நல்ல புகையானது
வளர்ந்து போய் – மேலே கிளம்பிப்போய்
எங்கும் நிறை ஆர வான்மூடும் – எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற

விளக்க உரை

யஜ்ஞயாகங்களை யநுஷ்டிக்கும் வைதிக ப்ராஹ்மணர்கள் வாழ்கிற விடம் திருநறையூர் என்பது முன்னடிகளின் கருத்து; “மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகை போய்த் திடவிசும்பிலமரர் நாட்டை மறைக்குந்தண் திருப்புலியூர்” (8-9-8) என்ற திருவாய்மொழியை அடியொற்றி யருளிச்செய்கிறபடி. ஹோமரக்நிகளிற் கிளர்ந்த தூமம் ஆகாசமெங்கும் பரவி மறைந்திருக்கப்பெற்ற. திருநறையூரில் பிரமன் சிவன் முதலான தெய்வங்கள் பணிந்து போற்ற ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கு மெம்பிரானுடைய இணையடியே அடை நெஞ்சே!

English Translation

O Heart! The smoke from the fire altar of the Vedic seers climbs up and fills the sky with wealth-laden clouds in Tirunaraiyur. The Lord stands above all, worshipped by Siva and Brahma, Attain his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்