விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்*  செங் கமலத்து இடை இடையில்*
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்*  பயன் விளைக்கும் திருநறையூர்*
    கார் தழைத்த திரு உருவன்*  கண்ணபிரான் விண்ணவர்கோன்* 
    தார் தழைத்த துழாய் முடியன்*  தளிர் அடியே அடை நெஞ்சே!      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செங்கமலம் – செந்தாமரைகளினுடையவும்
இடை இடையில் – நடு நடுவே
கரும்பு – கரும்புகளானவை
ஓங்கி பார் தழைத்து – உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து
பயன் விளைக்கும் – பலன்களைக் கொடுக்கப்பெற்ற

விளக்க உரை

கரும்புவிளையும் நிலதிலே கருப்பங்கட்டைகளை வெட்டிவிட்டுச் செந்நெலை நடுவர்கள்; செந்நெலுக்குக் களையாக இடையிலே தாமரை விளையும்; முன்பு வெட்டிப் போட்ட கருப்பங்கட்டைகளும் பழைய வாஸநையாலே எழும்; செந்நெற்பயிர் ஒங்கவேணுமென்று க்ருஷிபண்ணினால் அதற்குன்னே கரும்புகள் ஓங்கிப் பயன் விளைவிக்கும்படியான நிலவளம் பொருந்திய திருநறையூரில் எழுந்தருளிக்காளமேகத் திருவுருவனாய் நித்யஸூரிநாதனாய்த் துழாய்முடியனான எம்பெருமானுடைய பாதபல்லவங்களைப் பணி நெஞ்சே!

English Translation

O Heart! Beautiful ripe golden sheaves of paddy grow with red lotuses in between; rows of well-laid sugarcane in plantation grow tall, in Tirunaraiyur. The Lord of dark cloud hue, Lor of the celestials, krishna, wears a wreath of Tulasi, Attain his tender feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்