விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்று ஒளித் துகில் படலம்*  துன்னி எங்கும் மாளிகைமேல்* 
    நின்று ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்*
    மன்று ஆரக் குடம் ஆடி*  வரை எடுத்து மழை தடுத்த* 
    குன்று ஆரும் திரள் தோளன்*  குரை கழலே அடை நெஞ்சே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்று – நெருங்கியும்
ஒளி – ஒழுங்குபெற்று மிருக்கிற
துகில் படலம் – த்வஜபடங்களின் திரள்கள்
மாளிகை மேல் –  மாளிகைகளின் மேல்
எங்கும் துன்னி  - எல்லாவிடங்களிலும் நிபிடமாய்

விளக்க உரை

திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க. குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர். குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.

English Translation

O Heart! Rows of cloth flutter on mansions everywhere density, hiding the sky in wealthy Tirunaraiyur. The Lord danced with pots and lifted a mountain to stop the rains with his mighty shoulders. Attain his resounding feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்