விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழி ஆரும் கன சங்கம்*  கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
    வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
    பழி ஆரும் விறல் அரக்கன்*  பரு முடிகள்அவை சிதற* 
    அழல் ஆரும் சரம் துரந்தான்*  அடிஇணையே அடை நெஞ்சே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கழி ஆரும் – உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற
கனம் சங்கம் – கனத்த சங்குகளானவை
எங்கும் – எல்லாவிடங்களிலும்
கலந்து – வந்துசேர்ந்து
நிறைந்து – வரிசை வரிசையாக இருந்து

விளக்க உரை

தீயசெயல்களினால் பழிமிகுந்த இராவணனுடைய பத்துத்தலைகளும் பாறிப்போம்படி அம்புசெலுத்தின பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருநறையூர்; இவ்வூர்த் திருவீதிகளில் பொன்னியாறு பெருகும் போது கொழிக்கப்படும் சங்குகள் வழியெங்கும் முததுக்களைப் பிரஸவித்துச் செல்வம் நிறைந்திருக்கிறது; இப்படிப்பட்ட திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய அடியிணைகளை யடைவதே நெஞ்சுக்குக்காரியமாகவேணும். கனசங்கம் வடமொழித் தொடர்;

English Translation

O Heart! Salt pans overflow with oysters that spill over the streets heaping pearls and bountiful wealth in Tirunaraiyur; the blame-worthy wicked Rakshasa's heavy heads rolled by the hot arrows of the bow-wielder Lord. Attain his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்