விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
    மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*
    முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
    இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெடை அடர்த்த – பேடையோடுகூடின
மட அன்னம் – அழகிய ஹம்ஸபக்ஷியானது
பிரியாது – அப்பேடையைச் சற்றும் விட்டும் பிரியாமல் உடனிருந்து
கமலம் மலர் – தாமரைப்பூவில்
மடல் எடுத்து – இதழ்களைக் கழற்றிவிட்டு

விளக்க உரை

இத்திருமொழியில் பாட்டுத்தோறும் நெஞ்சை விளித்துத் திருநறையூர் நம்பியின் திருவடிகளை வணங்குமாறு உபதேசிக்கிறார். பெடை அடர்த்த மடவன்னம் = பேடைகள் பிரணயகலஹம் செய்யப்பெற்ற மடவன்னம் என்றுமுரைக்கலாம். அடர்த்தல் – நெருங்கியிருத்தலும் சண்டைசெய்தலும். முடையடர்த்த = துர்நாற்றமுடைய என்றபடி. சிரம் – என்னும் வடசொல்லின் விகாரம். பலி- ; பிச்சை.

English Translation

O Heart! The male-embracing fema swan pair slips the nectar from peta fallen lotus flowers in fertile fields C Tirunaraiyur; Siva, bearing the skull begging-bowl and rooming the three worlds, was relieved of his cur bythe Lord who is the husband Sri. Attain his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்