விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
    சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*
    கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
    நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு ஏறு – மேன்மேலும் அதிசயித்து வருகிற
நீள் சோதி – அளவற்ற தேஜஸ்ஸையுடைய
பொன் ஆழி தன்னோடும் – அழகிய திருவாழி யாழ்வானும்
சங்கு ஏறு கோலம் தட – ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய
கை – திருக்கைகளையுடைய

விளக்க உரை

ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் மிக்கு வளராநின்ற எல்லையில்லாத தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானோடுகூட ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானுக்கும் குடியிருப்பான அழகிய திருக்கைகளை யுடையனாய்த் திருக்குடந்தையிற் கண்வளர்ந்தருள்பவனான எம்பெருமானைத் திருநறையூரிலே காணப்பெற்றேன்.

English Translation

The Lord who reclines in fragrant kudanadai wields a beautiful white conch and a radiant discus. He is our king. I have seen him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்