விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல் ஆர் மதிள் சூழ்*  கதி இலங்கைக் கார் அரக்கன்* 
    வல் ஆகம் கீள*  வரி வெம் சரம் துரந்த
    வில்லானை*  செல்வ விபீடணற்கு வேறாக* 
    நல்லானை நாடி*  நறையூரில் கண்டேனே .    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல் ஆர் மதிள் சூழ் கடி – கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட
இலங்கை கார் அரக்கன் – அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய
வல் ஆகம் கீள – மிடுக்குடைய சரீரம் தொலையும்படி
வரி வெம் சரம் துரந்த – அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த
வில்லானை – சார்ங்கத்தை யுடையவனும்

விளக்க உரை

அஸத்துக்களைத் தண்டித்து ஸத்துக்களைக் கைக்கொள்ளுமியல்வினன் என்பது பிரஸித்தமாகும்படி லங்காதிபதியான ராவணனைக் கொன்றொழித்தது ஸ்ரீவிவீஷணாழ்வானைப் பரிக்ரஹித்தருளின பெருமானைத் திருநறையூரில் காணப்பெற்றே னென்கிறார். செல்வவிபீடணற்கு = இலங்கைச் செல்வம் முழுவதையும் உதறிவிட்டு வந்து சேர்ந்த விபீஷணனைச் செல்வவிபீடண னென்றது அழியாச்செல்வமாகிய பகவத்பக்தியுடைமைபற்றியென்க. வால்மீகி முனிவனும், இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற இவ்விபீஷணாழ்வானைப்பற்றிப் பேசும்போது அந்தரிக்ஷகத : ஸ்ரீமாந்” என்றார்; அப்போது விபீஷணனிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைணவ ஸ்ரீயேயாம். இளையபெருமாள் விஷயத்திலும் கஜேந்திராழ்வான் விஷயத்திலும் இங்ஙனமே சொல்லப்பட்டதுண்டு; அயோத்திச் செல்வமனைத்தையும் துறந்து இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் “லக்ஷ்மணோ வக்ஷ்மிஸம்பந்ந :” எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த வக்ஷ்மியாவது கைங்கரியருசியாகிற வக்ஷிமியேயாம்.

English Translation

The Lord came as a bow-wielder and killed the mighty Ravana king of ocean-girdled Lanka He is the benevolent one, good to the young vibhishana. I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்