விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை
    வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
    நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓடா அரி ஆய் – நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி
இரணியன் ஊனை இடந்த – ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும்
சேடு ஆர் பொழில் சூழ் – இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட
திருநீர்மலை யானை – திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும்
வாடா மலர் துழாய் மாலை முடியானை – செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை

விளக்க உரை

ஓடா அரி போரில் பின்வாங்காத ஸிம்ஹம் என்றும், நாட்டில் நடையாடாதே அபூர்வமாகத் தோன்றின ஸிம்ஹம் என்று முரைப்ப.

English Translation

The Lord came as a man-lion and destroyed Hiranya. He is the Lord of Tirunimalai surrounded by gorves. He wears of Tulasi wreath of unfading fragrance. I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்