விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்று உலகம் மூன்றினையும் அளந்து*  வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு* 
    வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*  விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து* 
    பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*  புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
    தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகம் மூன்றினையும் - மூவுலகங்களையும்
அளந்து - (திரிவிக்கிரமனாய்) அளந்து கொண்டவனும்
வேறு ஓர் அரி உரு ஆய் - விலக்ஷ்ணமானவொரு நரஸிம்ஹரூபியாகி
இரணியனது - ஹ்ஹிரண்யாஸுரனுடைய
ஆகம் - உடலை

விளக்க உரை

மூவுலகங்களையும் மாவலினயினபிமானத்தில் நின்றும் விலக்கித் தன் திருவடிக்கீழ் இட்டுக்கொண்டவனும், எங்குங்கண்டறியாத விலக்ஷணமான நரஸிம்ஹமூர்த்தியாகி இரணியன் மார்வைக்கிழித்து அவனை வீரஸ்வர்க்கமனுப்பினவனுமான பெருமானுடைய ஆதரவுக்கு இலக்காக வேண்டியிருப்பீர்! திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள் தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் தலைவனான சோழன் சேர்ந்து உய்ந்த தலமாம் இத்திருநறையூர் இவ்வரசன் ஆண்ட நாட்டில் பெருகும் பொன்னியாற்றின் வளமுரைப்பது மூன்றாமடி. காவிரியானது ஸஹ்யபர்வதத்தில் நின்றும் பெருகிவரும்போது வருமிடையே தடையாகநிற்கும் மலைகளையுடைத்துக்கொண்டு பெருகுகின்றமையைச் சொல்லுகிறது ‘விலங்கல் பாய்ந்து’ என்று.

English Translation

O Devotees, if you wish to be guests of the Lord who measured the Earth and who came as a fierce man-lion to destroy the Asura Hiranya despatching him to the sky, go now to Tirunaraiyur, -where the river Ponni descending near the mountains flows through plams and water is the fields, washing gold and gem, -where the chola king of the South and North, comes to offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்