விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி*  பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி* 
    அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*  அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
    வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த* 
    செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பைங் கண் - பசுமையான திருக்கண்களையுடைய
ஆள் அரி உரு ஆய் - நரஸிம்ஹரூபியாகி
வெருவ நோக்கி - (எதிரிகள்) அஞ்சும்படி விழித்து
வரம் பரு தோள் இரணியனை - பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களையுடையனான இரணியாசுரனை
பற்றி வாங்கி - பிடித்திழுத்து

விளக்க உரை

நரஸிம்ஹாவதாரத்தை யநுபவிக்கிறார் முன்னடிகளில். சிங்கத்திற்குக் கண்ணில் பசுமை ஜாதிஸ்வபாவமாதலால் ‘பைங்கண்’ எனப்பட்டது. பார்த்த பார்வையிலேயே இரணியன் குடல் குழம்பிப் போம்படி பார்த்து, அதற்குமேல் நகங்களையுங்கொண்டு அவனுடலைப் பிளந்தொழித்த பெருமானது திருவடிகளைப் பெறவேண்டியிருப்பீராகில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். ‘பருவரைத்தோள்’ என்ற பாடத்திற்கு பருத்த மலை போன்ற தோள்களையுடையனென்றுரைக்க.

English Translation

O Devotees, if you wish to stand by the feet of the Lord who came as a fierce man-lion with terrifying looks, who picked up the mighty Asura Hiranya on his lap and fore his chest spewing hot blood everywhere, go to Naraiyur Manimadakkoyil where sembianka-chenganan, -who rides horses in war, victoriously against elephant-mounted crowned kings, -comes to offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்