விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*  குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்* 
    எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*  இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*
    உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*  உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள* 
    செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு வெள்ளம் கொண்ட காலம் - பிரளயப் பெருவெள்ளம் உலகங்களை) ஆக்ரமித்தவொரு சமயத்திலே
கொழுகயல் ஆய் - பருத்த மத்ஸ்யரூபியாய்க் கொண்டு
குலவரையில் மீது ஓடி - குவபர்வதங்களின் மேலே போய் ஸஞ்சரித்து
அப்பால் - அதற்குமேலே
அண்டத்து - அண்டபித்தியளவும்

விளக்க உரை

“குலவரையின் மீதோடியண்டத்தப்பால் எழுந்தினிது விளையாடும்” என்றது பிரளயப் பெருவெள்ளம் நீங்குமளவும் ஓடத்தை வஹித்துக்கொண்டு விளையாடினமையைச் சொன்னவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானது திருவடிகளை விடாது பணிந்திருக்கவேணுமென்னும் விருப்புடையீர்! திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள் – என்கிறார். “உழுஞ்செறுவின் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ளச் செழும்பொன்னி வளங்கொடுக்கும்” என்ற அடைமொழி திருநறையூரில் அந்வயிக்கவுமாம், சோழனிடத்து அந்வயிக்கவுமாம். பொன்னி பெருகும்படியான நாட்டுக்குத் தலைவன் என்றவாறு. காவிரியாறு பெருகும்பொது வயல்களிலே ரத்னங்களைக் கொணர்ந்து தள்ளுவதும் சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலானவற்றை உலகங்கொள்ளுமாறு அடித்துக்கொண்டு வருவதும் இயல்பு.

English Translation

O Devotees, if you wish to live by the feet of the Lord who came as big fish over deluge waters and swan over mountains and beyond, playing jayfully, go now to Naraiyur Manimadakkoyil where the river ponni washes gems Sandal and Agli wood over field embankments, which the world comes to pick up, and where the Chola king comes to offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்