விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 
    காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
    சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளபம் தாமம் நீள் முடி - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான
மாயன் தான் நின்ற - ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும்,
நாமம் - புகழ்பெற்றவைகளாய்
திரள் மா மாளிகை - நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால்
சூழ்ந்த - சூழப்பட்டதுமானதுளபம்
தாமம் நீள் முடி - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான
 

விளக்க உரை

நாமம் – ப்ரஸித்திப் பொருளதான வடசொல் அவ்யயம். காமக்கதிர் ‘காமம்’ என்பது மிகுதிப்பொருளதான வடமொழி அவ்யயம். விரும்பத்தகுந்த ஒளியையுடைய வேல் என்னவுமாம். சேமம் – க்ஷேமம். “மாயன் தாள் நின்ற நாமத்திரள் மாமாளிகை” என்று பாடங்கொண்டு எம்பெருமானுடைய ஸ்ரீபாதசின்னம் பொலிகின்ற திருமண்காப்பு விளங்குகின்ற திருமாளிகையென்பாருமுளர். திருமாளிகைக் கதவுகளிலே இவ்விலச்சினைகாண்க.

English Translation

This song garland by sparking spear wielder Kaliyan is for the Tulasi-wreathed fall-crown Lord who resides in Naraiyur surrounded by famous fall mansions. Those who master it will secure the abiding grace of Tirumal.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்