விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாரை ஊரும் பாரம் தீரப்*  பார்த்தன்தன்* 
    தேரை ஊரும்*  தேவதேவன் சேறும் ஊர்*
    தாரை ஊரும்*  தண் தளிர் வேலி புடை சூழ* 
    நாரை ஊரும்*  நல் வயல் சூழ்ந்த*  நறையூரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாரை ஊரும் பாரம் தீர - பூமியில் நடமாடுகின்ற சுமையானது தொலையும்படியாக
பார்த்தன் தன் தேரை ஊரும் - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனான
தேவதேவன் - தேவாதிதேவன்
சேரும் ஊர் - நித்யவாஸம் செய்தருளும் திவ்யதேசம் (எதுவென்றால்)
தாரை ஊரும் தண் தளிர் வேலி - (தேனின்) வெள்ளம் பெருகாநின்ற குளிர்ந்த தளிர்கள் நிறைந்த வேலிகள்

விளக்க உரை

*- (தாரையூரும் இத்யாதி) ‘தார்’ என்று பூவுக்கும் பேராதலால், தாரை – புஷ்பத்தை, ஊரும் – தள்ளுகிற (அதாவது) தோற்கடிக்கிற, தளிர்களை யுடைத்தான வேலியாலே சூழப்பட்டும் நாரைகள் உலாவப்பெற்று மிருக்கிற வயல்களாலே சூழப்பட்ட. என்னும் வடசொல் ஐயீறாகத் தாரையெனத் திரிந்ததெனக்கொண்டால், தேனொழுகுகின்ற வேலி என்றதாம். வேலியின் சிறப்பே யிதுவானால் உள்ளுள்ள சிறப்பு வாசாமகோசர மென்கை.

English Translation

The Lord who drove the chariot for Arjuna to rid the Earth of its burden resides inNaraiyur where groves flow with nectar and cranes frequent the watered fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்