விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்*  விறல் வியூகம்* 
    விள்ள சிந்துக்கோன் விழ*  ஊர்ந்த விமலன் ஊர்*
    கொள்ளைக் கொழு மீன்*  உண் குருகு ஓடி பெடையோடும்* 
    நள்ளக் கமலத்*  தேறல் உகுக்கும் நறையூரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விசயற்கு ஆய் - அர்ஜுநனுக்காக
விறல் வியூகம் விள்ள - (எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும்
சிந்து கோன் விழ - ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும்
ஊர்ந்த - (தேரை) நடத்தின
விமலன் - பரிசுத்தனான பெருமானுடைய

விளக்க உரை

அர்ஜுநனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து வெற்றிபெறுவித்தவனும் ஸைந்தவனை முடியச்செய்தவனுமான பெருமான் வாழுமிடம் திருநறையூர். அர்ஜுநனுடைய தேர்க்குதிரகைள் வெண்ணிறங்கொண்டவை யென்பது “வெள்ளைப்புரவிக்குரக்கு வெல்கொடித்தேர்மிசை முன்புநின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலாலும் விளங்கும். ‘விஜயன்’ என்பது அர்ஜுநனுடைய நாமங்களுள் ஒன்று. வியூகம் – என்னும் வடசொல் விகாரம்.

English Translation

The Lord then drove the chariot for Arjuna, with white hoses that pounded the ocean-king Jayadratha, and his strong army. He resides inNaraiyur where white storks eat big fish from waters, then go with their mates to drink nectar from lotuses.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்