விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முந்து நூலும் முப்புரி நூலும்*  முன் ஈந்த* 
    அந்தணாளன் பிள்ளையை*  அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
    பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி*  புள் ஓடி* 
    நந்து வாரும்*  பைம் புனல் வாவி நறையூரே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முப்புரி நூலும் - யஜ்ஞோபவீதத்தையும்
முந்து நூலும் - அநாதியான வேதாக்ஷர ராசியையும்
முன் ஈந்த - முன்னே (தனக்குத்) தந்த
அந்தணாளன் - (ஸாந்தீபிநி யென்னும்) பிராமணனுடைய
பிள்ளையை - (கடலில் மூழ்கியிறந்த) புத்திரனை

விளக்க உரை

‘முந்துநூலீந்த’ என்றது – வேதமோதுவித்த என்றபடி. ‘முப்புரிநூலீந்த’ என்றநு உபநயநம் செய்வித்த என்றபடி. உபநயநம் செய்வித்தபிறகே வேதமோதுவித்தல் முறைமை யாதலால் ‘முப்புரிநூலும் முந்துநூலும் முன்னீந்த’ என இயைத்துக்கொள்ளுதல் பொருந்தும். எனபர் வடநூலார். கடலிற்புகுந்து முடிந்த ஸாந்தீபினி புத்திரனைப் பிழைப்பித்து மிடு்டுக்கொணர்ந்து கொடுத்த பெருமானுறையுமிடம் திருநறையூர். மரத்தின் பொதும்பிலேவாழுங் குட்டிக்காக இரைதேடும் பறவைகள் நத்தைகளை வாரிக்கொண்டு வரப்பெற்ற நீர்நிலங்களையுடையதாம் அத்திருப்பதி. வாவி-‘வாவீ’என்னும் வடசொல் விகாரம்.

English Translation

The Lord went to the sea and brought back the son for his preceptor. He resides in Naraiyur where birds go far to find snall-food and fly back to their hungry nestlings in freeholes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்