விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட* 
    சேனைத் தொகையைச் சாடி*  இலங்கை செற்றான் ஊர்*
    மீனைத் தழுவி வீழ்ந்து எழும்*  மள்ளர்க்கு அலமந்து* 
    நானப் புதலில்*  ஆமை ஒளிக்கும்நறையூரே.             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட - யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட
சேனை தொகையை சாடி - சேனைக் கூட்டத்தைச் சிதைத்து
இலங்கை செற்றான் - இலங்காபுரியை அழித்த பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)
மீனை - மீன்களை

விளக்க உரை

(மீனைத்தழுவி இத்யாதி) அவ்விடத்தில் நிலப்பண்பாலே மலைகள் போலே வளந்நீ திருக்குமாம் மீன்கள்; அவற்றைப் பிடிக்கிற உழவர்கள் இரண்டு கையாலுமாகத் தழுவுவர்கள்; அவை மிக்க வலியுள்ளனமையாதலால், பிடிப்பவர்களை உதறித்தள்ளிவிட்டுப் போய்விடும்; அங்ஙனம் தள்ளப்பட்டு விழுந்த உழவர்கள் மறுபடியும் அவற்றைப்பிடிக்க எழுந்திருப்பர்கள்; அதைக்கண்ட ஆமையானவை அஞ்சி வரப்பிலேநின்ற மஞ்சள் பற்றையிலே புகுந்து மறையும். இப்படிப்பட்ட வயல் வளத்தையுடையதாம் திருநறையூர்.

English Translation

The Lord destroyed the city of Lanka, battling against elephants, horses, chariots and foot-men, He resides in Naraiyur where tillers of the land fall upon mudskippers to catch them, and frightened turtles scurry into holes and borrows.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்