விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின் நேர் இடையார்*  வேட்கையை மாற்றியிருந்து* 
    என் நீர் இருமி*  எம்பால் வந்தது என்று இகழாதமுன்*
    தொல் நீர் இலங்கை மலங்க*  விலங்கு எரி ஊட்டினான்* 
    நல் நீர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாற்றி இருந்து - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர் - (கிழவரான) நீங்கள்
இருமி - இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன் - திரஸ்கரிப்பதற்கு முன்னே

விளக்க உரை

மூன்றாமடியின் பிற்பகுதியை ‘விலங்கெரி’ என்று மெடுக்கலாம், ‘இலங்கெரி’ யென்று மெடுக்கலாம். முந்தினதில், விலங்காலே எரியூட்டினான் – ஹநுமானாகிற சாகாமிருகத்தைக் கொண்டு தீக்கொளுவித்தவன் என்றதாம். பிந்தினதில், இலங்கு – ஜ்வலிக்கின்ற என்றபடி. இதற்கு முன்பு அக்கினியானவன் இலங்கையினுட் புகுவதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தான்; சோறு வேவப்பண்ணுகை முதலிய முக்கிய காரியங்களுக்கு வேண்டுமளவு புகுந்திருந்தான்; இராமபிரானால் நன்றாக ஜ்வலித்துக்கொண்டு எங்கும் புகுந்து உண்டுகளித்தானென்க.

English Translation

O Heart! Before lightning-thin-waisted dames change their affections and ask, "why did you come coughing so far?" and chatise, let us go to the Lord who burnt the ocean-girdled city of Lanka, -He resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்