விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விலங்கும் கயலும்*  வேலும் ஒண் காவியும் வென்ற கண்* 
    சலம் கொண்ட சொல்லார்*  தாங்கள் சிரித்து இகழாத முன்*
    மலங்கும் வராலும்*  வாளையும் பாய் வயல் சூழ்தரு* 
    நலம் கொள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கும் - மானையும்
கயலும் - மீனையும்
வேலும்- வேற்படையும்
ஒண் காவியும் - அழகிய செங்கழுநீர்ப்பூவையும்
வென்ற - தோற்கடித்த

விளக்க உரை

வெருண்டாற்போல் பார்க்கிறபார்வைக்கு, மான்நோக்கும், பளபளவென்று மிளிர்தற்கும் புடைபரந்து நீண்டிருக்குந் தன்மைக்கும் மீனும், கூர்மையாகப் பாயுந்தன்மைக்கு வேலும் கண்ணுக்கு ஒப்பாகுமாதலால் “விலங்குங்கயலும் வேலுமொண்காவியும் வென்றகண்” எனப்பட்டது. மலங்கு என்பதும் வரால் என்பதும் வாளை என்பதும் மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்

English Translation

O Heart! Before artful dames with eyes that surpass the fawn, the spear and the lotus laugh in derision, let us go to the Lord surrounded by fertile fields and waters where Malangu, Varal, and Valai fish dance, -He resides in Naraiyur,-and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்