விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்கு உண் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  நீர் 
    இங்கு என் இருமி*  எம்பால் வந்தது? என்று இகழாதமுன்* 
    திங்கள் எரி கால்*  செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*  
    நங்கள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கு உண் குழலார் - மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர்
கூடி இருந்து - கூடு்டமாகத் திரண்டிருந்து
சிரித்து - பரிஹாஸம் பண்ணி
நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என் - ‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘
என்று இகழாத முன்- என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,-

விளக்க உரை

கொங்குண்குழலார் = (வண்டுகள் படிந்து) தேனைப் பருகப்பெற்ற கூந்தலையுடையார் என்னவுமாம். அவர்கள் பரிஹஸித்துத் தள்ளச்செய்தேயும் ‘இப்படியும் ஒரு கூந்தலழகுண்டோவுலகில்!’ என்று வருணிப்பர் காமுகர் என்பது இதில் தோன்றும்.

English Translation

O Heart! Before fragrant coiffured dames gather around giggling, and ask, "Coughing man, what have you come here for?" let us go to the Lord who became the Sun, the Moon the wind and the Fire, -he resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்