விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மை ஒண் கருங் கடலும்*  நிலனும் மணி வரையும்* 
    செய்ய சுடர் இரண்டும்*  இவை ஆய நின்னை*  நெஞ்சில்
    உய்யும் வகை உணர்ந்தேன்*  உண்மையால் இனி *  யாதும் மற்று ஓர் 
    தெய்வம் பிறிது அறியேன்*  திருவிண்ணகரானே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை ஒண் கருங்கடலும் - மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும்
நிலனும் - பூமியும்
மணி வரையும் - சிறந்த பர்வதங்களும்
செய்ய இரண்டு சுடரும் - அழகிய சந்த்ர ஸூர்யர்களும்
இவை ஆய நின்னை - ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “மற்றோர் தெய்வமெண்ணேன்” என்றதை ஹேதுவோடே உபபாதிக்கிறரிதில். திருவிண்ணகர்ப்பெருமானே!, ஸப்தஸாகரங்கள், அவற்றால் சூழப்பட்ட பூமி, அதற்கு ஆணியடித்தாற்போலே யிருக்கிற குலாசலங்கள், சந்திரன் ஸூர்யன் முதலிய சுடர்ப்பொருள்கள் ஆகிய இவையெல்லாம் நீயே; உன் உருவமே இவையெல்லாம் என்று நான் நன்குணரப்பெற்றேனாதலால் ஸர்வசரீரியான உன்னைவிட்டு உனது சரீரமான தேவதாந்திரங்களைத் தெய்வமாக நெஞ்சில் தான் நினைப்பேனோ? இதுவரையில் நான் அழிந்துபோனதுபோலல்லாமல் இனி உஜ்ஜீவிக்க ப்ராப்தனாயினேனாதலால் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்றாராயிற்று.

English Translation

O Lord of Tiruvinnagar! You are the dark ocean, the Earth, the beautiful mountains, the radiant twin orbs, and all else. Through truthfulness I realised the path of elevation of spirit. Now, other than you, I know of no other god.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்