விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*  உன்னை என் மனத்து வைத்துப் 
    பெற்றேன்*  பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
    வற்றா நீள் கடல் சூழ்*  இலங்கை இராவணனைச் 
    செற்றாய்*  கொற்றவனே!*  திருவிண்ணகரானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வற்றா நீள் கடல் சூழ் - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட
இலங்கை - லங்காபுரியில்
இராவணனை - ராவணனை
செற்றாய் - கொன்றொழித்தவனே!,
கொற்றவனே - தேவாதிதேவனே!
 
 
 
 

விளக்க உரை

ஒருவராலும் அழிக்கவொண்ணாத அரணையுடைத்தான இலங்கையை நீறுபடுத்தி இராவணனையும் வேரோடே களைந்தொழித்தாப்போலே அடியேனுடைய பிரதிபந்தகங்களையெல்லாம் தொலைத்தருளின பெருமானே! நான் ஆச்ரயிக்கத்தகுந்த தெய்வம் வேறொன்று இருப்பதாக நெஞ்சிலும் நினையேன்; ஸர்வஸ்மாத்பரனானவுன்னையே நெஞ்சில் தாங்கி அலப்யலாபம் பெற்றேன்; என்ன பேறுபெற்றேனென்னில், தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதற்கு ஒருகால் காரணமாகக்கூடிய ஜன்மமும் தொலையப்பெற்றேன்; திருவிண்ணகரிற் கண்ட காட்சியிலே பெற்ற பேறுகாண் இது.

English Translation

O Lord of Tiruvinnagar! O Lord who destroyed the ocean-girdled Lanka city's king Ravana! My Liege! I seek no other god. I have placed you firmly in my heart, in doing so, I have found my freedom from birth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்