விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
    வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*
    ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
    கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மருவார் - பகைவருடைய
ஊன் ஆர் - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான
கலியன் - ஆழ்வார்
ஒலிசெய் - அருளிச்செய்த
தமிழ் மாலை - இத் தமிழ்ப்பாசுரங்களை
வல்லார் - ஓதவல்லவர்கள்

விளக்க உரை

இத்திருமொழிகற்றார்க்குப் பயனரைத்துத் தலைக்கட்டினாராயி்ற்று. இங்குநின்றும் பரமபதத்துக்கு எழுந்தருளுமவர்களை அங்குள்ள நித்யஸூரிகள் “ஆண்மின்கள் வாகனம் ஆழியான தமரென்று“ என்கிறபடியே ‘நீங்கள் பரமபதத்தை ஆளுங்கோள்‘ என்பாராதலால் ‘கோனாய்‘ எனப்பட்டது. இத்திருமொழிகற்றா ரிட்டவழக்காயிருக்குமாம் திருநாடு.

English Translation

The high-walled-fertile-Mangal King. Spear-wielder Kaliyan, has sung this garland of Tamil songs for the Lord residing in the nectored groves of Tiruvinnagar. Those who master it will enter the festooned city of the celestials as kings.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்