விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறிந்தேன் பெற்ற மக்கள்*  பெண்டிர் என்று இவர் பின் உதவாது 
    அறிந்தேன்*  நீ பணித்த அருள் என்னும்*  ஒள் வாள் உருவி
    எறிந்தேன்*  ஐம்புலன்கள் இடர் தீர*  எறிந்து வந்து 
    செறிந்தேன்*  நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெற்ற மக்கள் - வயிற்றில் பிறந்த பிள்ளைகள்
பெண்டிர் - மனைவியர்
என்ற இவர் - இத்யாதிகளான பந்துக்கள்
பின் உதவாது அறிந்தேன் - முடிவு காலத்துக்குத் துணையாக மாட்டார்க ளென்பதைத் தெரிந்து கொண்டவனாய்
பிறிந்தேன் - (அவர்களை) விட்டொழிந்தேன்;

விளக்க உரை

அறிவுடையார், மக்களென்றும் மனைவியரென்றும் சில பந்துக்களை ஆதரித்துப் போருவது ஏதுக்காகவென்னில், உடல் இளைத்தவாறே அருகில் இருந்துகொண்டு கர்ணாமிர்தமாக எம்பெருமான் திருநாமங்களைச் செவியிலே ஓதுவார்களென்பதற்காக; அந்தப் பந்துக்கள்தாம் செய்வதென்னென்னில், ஸமயங்களிலே ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டும் மரணஸமயத்திலும் விடாதே 1.“சோர்வினாற் பொருள்வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லென்றுசுற்றுமிருந்து” என்கிறபடியே ‘எந்த சந்து பொந்துகளில் என்ன பொருள் புதைத்து வைத்திருக்கிறாய், சொல்லு’ என்று பிச்சிக் கொண்டிருப்பார்களேயன்றி, பகவந் நாமமாகிற அமுதத்தை லவலேசமும் செவியிலே ஊட்டமாட்டார்கள்; ஆகவே இந்த ஆபாஸ பந்துக்களெல்லாம் “துணையும் சார்வுமாகுவார்போல்........ அட்டைகள் போல் சுவைப்பரே” யன்றி நல்வழிக்குச் சிறிது முதவார்கள் என்பதை நன்கறிந்து கொண்டு அவர்களிடத்து நசையை விட்டுத்தொலைத்தேன் என்கிறார் முதலடியால். ஆபாஸ பந்துக்களை விட்டு, ஆப்த பந்துவான நீ திருவாய்மலர்ந்தருளிய சரமச்லோகத்தைப் பற்றினேனென்கிறார் மேல்.

English Translation

O Lord residing in Tiruvinnagar! Realising that wives and children will be of no help in the world hereafter, I weaned myself away from them, With the dagger called grace that you gave me, I cut myself free from the tyranny of the senses and tell at your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்