விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*  இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்* 
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்*  இருக்கினில் இன் இசை ஆனவனே!*
    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருக்கு உறும் அந்தணர் - வேதம் வல்லவரான பிராமணர்கள்
அமரர்கள் - தேவதைகளினால்
பெருக்க மொடு அமர - (தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக
சந்தியின் வாய் - ஸந்தியா காலந்தோறும்
உருக்குறு நறு நெய் கொண்டு - உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு

விளக்க உரை

வேதமோதியுணர்ந்த அந்தணர்கள் ஸந்த்யாகாலந்தோறும் உருக்கின நெய்யைக் கொண்டு அக்நியில் ஹோமம் செய்வதற்கு மந்திரமாகிய யாதொரு வேதமுண்டு, அதன் உறுப்பாகிய பிரணவத்தினால் ப்ரதிபாத்யனா யுள்ளவனெ!. இருக்கு = வடசொல்லிகாரம்; இச்சொல் வேதங்களுக்குப் பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்குச் சிறப்புப் பெயருமாக வழங்கும் சந்தி – ஸந்த்யா. இன்னிசையானவனே = ‘இசை’ என்னுஞ் சொல் லக்ஷிதலக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும்; எங்ஙனேயெனில், இசையாவது ஸ்வரம்; ஸ்வரமென்பது பிரணவத்திற்கும் வாசகம்; “யத்வேதாதௌஸ்வர: ப்ரோக்த:” என்றது காண்.

English Translation

Lighting the fire-altar morning and evening. Vedic seers offer Ghee obiations, chanting the Mantras of Vedas to gods, -you become the music of their Rig-Yajus-Sama. O Lord! if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்