விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்*  ஏர் கெழும் உலகமும் ஆகி*   முத
    லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்*  சீர் கெழு நான்மறை ஆனவனே!*
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் கெழு - மேகங்கள் மிகப்படிந்திருக்கப் பெற்ற
கடல்களும் - ஸமுத்ரங்களுக்கும்
மலைகளும் - மலைகளுக்கும்
ஆய்  - தாரகனாயும்
ஏர் கெழும் - ஒழுங்குபட்டிருக்கிற

விளக்க உரை

மேகங்கள் நீர்கொண்டெழுவதற்காகப் படியும் கடல்களையும் மலைகளையும் ஸ்வஸங்கல்பத்தால் நிலைநிறிகச் செய்தருள்பவனே!, ஸகலசராசரங்களையும் சரீரமாகக் கொண்டுள்ளவனே!, பிரமன் சிவனிந்திரனென்று பெருமதிப்பாகச் சொல்லப்படுகின்ற தேவர்களாலும் ‘இப்பாப்பட்டது இவ்வளவுடையது’ என்று அளவிட்டறிய முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையவனே! நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுமவனே! நீ இப்படிப்பட்டவனா யிருக்கிறயென்பதை நான் ஏட்டிலே கேட்டுப்போவதல்லாமல் உன்னுடைய அஸாதாரணாகாரத்தை நான ஸாக்ஷாத்கரிக்கும்படி என் பக்கலிலே அருள்செய்வாயாகில் நானும் மெய்யே இந்த ஸம்ஸார வாழ்க்கையை அருவருத்தேனாவேன் என்றாராயிற்று.

English Translation

You became the oceans and mountains again, worlds in the world of creation above, you became the lotus-born Brahma-creator, and the proper chants of the Vedas four, O Lord if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்