விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்*  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்* 
    கலை தரு குழவியின் உருவினை ஆய்*  அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகமும் - உலகங்களையும்
உயிர்களும் - (அங்குள்ள) பிராணிகளையும்
உண்டு - திருவயிற்றிலே வைத்து நோக்கி
கலைதரு - மிகச்சிறிய வடிவுகொண்ட
குழவியின் உருவினை ஆய் - குழந்தை ரூபியாய்க் கொண்டு

விளக்க உரை

கலைகருகுழவி ‘கலா’ என்னும் வடசொல் ‘பதினாறில் ஒரு பங்கு’ என்று பொருள்படும் முகத்தால் மிகச் சிறுமையை உணர்த்திற்றாகும்; இளங்குழந்தை என்றபடி. இனி, உலகத்திலுள்ள குழந்தைகள் போலன்றியே அறிவுமிக்க குழந்தை என்னவுமாம்; அப்போது சாஸ்த்ரமென்னும் பொருளதான ‘கலா’ சப்தம் இலக்கணையால் அறிவுக்கு வாசகமாகும்

English Translation

Swallowing the Earth and the sun and Moon, living and the non-living, all in a trice, you came as an innocent child in the ocean, floating on a fig leaf in yore in the past, O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்