விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
  மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*
  சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
  தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முலை - ‘முலையையும்;
ஏதும் - (மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்;
வேண்டேன் - (நான்) விரும்பமாட்டேன்;
என்று ஓடி - என்று சொல்லி ஓடிப்போய்;
நின்காதில் கடிப்பை - (நான்) உன் காதிலிட்ட காதணியை;

விளக்க உரை

கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலையுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலையுண்ணத் தொடங்க அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து ‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச்சென்று காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்துவிட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்துகொண்டு காதில்கடிப்பை இடப்போகையில் அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமுமில்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது என்னுடைய குற்றமேகாண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.

English Translation

O Trivikrama, You happily lifted a mountain against hailstones and protected the grazing cows! You broke a bow for Sita, you strode the Earth as the manikin. O Master of the cowherd-clan! You run awa

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்