விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*  அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!* 
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*  பெண் அமுது உண்ட எம் பெருமானே!* 
    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல் 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அண்ணல் செய்து - ‘தானே ஸர்வஸ்வாமி‘ என்பதைக் காட்டிக் கொண்டு
அலைகடல் கடைந்து - அலையெறிகின்ற கடலைக் கடைந்து
அதனுள் நஞ்சு - அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தை
நுதல் கண் - நெற்றிக்கண்ணனான ருத்ரன்
உண்ண - உட்கொள்ளும்படியாக

விளக்க உரை

கடலில் புறவமுது, உள்ளமுது என இரண்டு அமுதுண்டாயின; புறவமுதாகிய உப்புச்சாறு தேவர்கட்கு அளிக்கப்பட்டது; “சீதக்கடல் உள்ளமுது” எனப்பட்ட பிராட்டியாகிய உள்ளமுது தன்னால் ஸ்வீகரிக்கப்பட்டது என ரஸோக்தியாக அருளிச்செய்வது இரண்டாமடி. அண்ணல் செய்து தன்னடைய ஸ்வாமித்வத்தைப் பிரகாசிப்பித்துக்கொண்டு என்றாவது, தன்னுடைய ஔதார்யத்தைக் காட்டிக்கொண்டு என்றாவது, பொருள் பெற்றுக்கொள்ளலாம். சிவனுக்கு நெற்றியில் மூன்றாவது கண் உள்ளதனால் ‘நுதற்கண்‘ எனப்படுவான்.

English Translation

Gracing you came to the churn of the ocean, Gave the blue poisonous drink to Siva, Gave the ambrasia to gods and you retained Lady Ambrasia to wed in your arms. O Lord1 if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்